காலைத் தியானம் – செப்டம்பர் 22, 2020

நெகே 9: 32 – 38              

இதோ இன்றைய தினம் நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம்     

இஸ்ரவேலர், கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த இடத்திலேயே அடிமைகளாகிவிட்டார்கள். தங்கள் சொந்த நாட்டிலுள்ள வருமானத்திலேயே அவர்களை ஆண்டு வந்த மற்றொரு நாட்டின் அரசனுக்கு வரி செலுத்த வேண்டியதிருந்தது.நெகேமியாவும், எஸ்றாவும், மற்ற இஸ்ரவேலரும், ஐயோ எங்களை இப்படிப்பட்ட நிலையில் வைத்துவிட்டீரே என்று கர்த்தரிடம் கேட்கவில்லை. எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர். நீர் உண்மையாய் நடப்பித்தீர் என்று சொல்லுகிறார்கள் (வசனம் 33). கர்த்தர் எப்பொழுதும் உண்மையும் நீதியுமுள்ளவர் என்பதை உணர்ந்துகொள்வது மனந்திரும்புதலின் ஒரு முக்கிய அம்சம். ஒருவேளை உன்னையும் உன் ஆண்டவர் கடினமான பாதையிலே வழி நடத்திச் சென்றால், ஏன் என்பதை அறிந்து ஆண்டவரிடம் மன்னிப்பு கேள். ஆண்டவர் உனக்கு சமாதானம் தருவார்.

ஜெபம்

ஆண்டவரே, என் பாவங்களை மன்னித்து எனக்கு சமாதானம் தாரும். ஆமென்.