காலைத் தியானம் – செப்டம்பர் 23, 2020

நெகே 10: 1- 31                  

ஆணையிட்டுப் பிரமாணம் பண்ணினார்கள்     

நெகேமியாவின் நாட்களில் இருந்த இஸ்ரவேல் மக்கள் கர்த்தரோடு தங்கள் உடன்படிக்கையைப் புதுப்பித்து அதை எழுதி வைத்தார்கள். மோசேயின் நியாயப்பிரமாணங்களில் முக்கியமான சில பகுதிகளை எழுதி வைத்து, அதன்படி நடப்போம் என்று கர்த்தரோடு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். தனி மனிதனாக ஆண்டவரோடு ஒப்புரவாதல் அவசியம். அதே சமயம், குடும்பங்களாகவும் திருச்சபையாகவும் புதுப்பிக்கப்பட்டு ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதின் மூலம் சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இன்று உலகத்தோடு ஒத்து வாழ்கிறவர்களைத்தான் திருச்சபையிலும் பார்க்கிறோம். ஆண்டவரை அறியாதவர்களைத் திருமணம் செய்ய வேண்டாம். ஓய்வு நாளில் வியாபாரம் செய்யவேண்டாம். ஏழைகளிடம் இரக்கம் காட்டுவோமாக.

ஜெபம்

ஆண்டவரே, உமது பிரமாணங்களில் ஒன்றையும் இக்காலத்துக்கு ஏற்றதில்லை என்று ஒதுக்கிவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.