காலைத் தியானம் – செப்டம்பர் 30, 2020

நெகே 13: 4 – 9                

தொபியாவின் வீட்டுத் தட்டுமுட்டுகளையெலாம் வெளியே எறிந்து விட்டேன்    

அர்தசஷ்டா ராஜா, நெகேமியாவை ஒரு குறிப்பிட்ட காலம் வரை எருசலேம் சென்று வர அனுமதி கொடுத்திருந்தார் (நெகேமியா 2: 5,6). அந்த குறிப்பிட்ட காலம் முடிந்திருக்க வேண்டும். ஆகையால் அவர் ராஜாவைப் பார்க்க பாபிலோன் சென்றுவிட்டார். நெகேமியா திரும்பி வருவதற்குள் தேவாலயத்திற்குள்ளேயே ஊழல் புகுந்துவிட்டது. இந்த தொபியா யார் என்பதை மக்கள் எப்படி மறக்கமுடியும்? இஸ்ரவேல் மக்களுக்கும் நெகேமியாவுக்கும் அலங்கம் கட்டுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் எவ்வளவு தொந்தரவு கொடுத்தான்! அப்படிப்பட்ட தொபியாவுக்கு தேவாலயத்திற்குள்ளேயே தங்குவதற்கு அறையா? எப்படிப்பட்ட அறை என்பதை 5ம் வசனத்தில் பார்க்கிறோம்.  நெகேமியா வைராக்கியத்துடனும் தைரியத்துடனும் அநியாயத்தை எதிர்த்து செயல்பட்டார். இன்று அநியாயங்களை எதிர்த்து நிற்க நீ தயாரா?                     

ஜெபம்

ஆண்டவரே, எங்கே அநியாயங்கள் நடந்தாலும் அவற்றை எதிர்த்து நிற்கும் தைரியத்தை எனக்குத் தாரும். ஆமென்.