காலைத் தியானம் – அக்டோபர் 02, 2020

நெகே 13: 15 – 22                    

ஓய்வுநாளைப் பரிசுத்த குலைச்சலாக்குகிறதினால் உக்கிரத்தை அதிகரிக்கப் பண்ணுகிறார்கள்    

ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிக்கவேண்டும் என்பது கர்த்தருடைய பத்துக் கட்டளைகளில் ஒன்று. இந்நாட்களில் அதை எல்லாரும் அலட்சியப்படுத்துவது போலவே தெரிகிறது. ஓய்வு நாள் பரிசுத்த நாள் என்றும் அழைக்கப்படுகிறது. அந்நாள் கர்த்தரைக் குறித்து தியானிப்பதற்கும், அவருக்கு சேவை செய்வதற்கும், ஓய்ந்திருப்பதற்கும் மாத்திரமே ஏற்படுத்தப்பட்டது. நான் சிறுவனாக இருக்கும்போது ஓய்வுநாளில் விளையாடப் போகக்கூடாது என்ற கண்டிப்பு இருந்தது. இன்று சிறுவர்கள் வெளியே போய் விளையாடுகிறார்கள்; அல்லது கம்ப்யூட்டர், மொபைல் ஃபோன் போன்றவைகளில் விளையாடுகிறார்கள். பெரியவர்கள் தொலைக்காட்சியில் பொழுதைப் போக்குகிறார்கள்; அல்லது ஆறு நாட்கள் வேலை செய்து சம்பாதித்தது போதாது என்று பரிசுத்த நாளிலும் பணம் சம்பாதிக்கப் போய் விடுகிறார்கள். ஓய்வு நாளின் பரிசுத்தத்தை அலட்சியப்படுத்துகிறதினால் கர்த்தருடைய கோபத்துக்கு ஆளாகிறாயோ? நீ அனுபவிக்கும் தேவையில்லாத துன்பங்களுக்கும் தடைபடும் ஆசீர்வாதங்களுக்கும் நீயே காரணமோ?

ஜெபம்

ஆண்டவரே, நீர் ஏற்படுத்திய ஓய்வு நாளை அலட்சியப்படுத்தாதபடி என் உள்ளத்தை சீர்ப்படுத்தும். உலகத்தோடு ஒத்துப்போகாமல் உமக்காக உறுதியுடன் வாழ மனஉறுதி தாரும்.  ஆமென்.