காலைத் தியானம் – அக்டோபர் 06, 2020

எஸ்தர் 2: 1 – 4                    

அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது   

ராஜாவின் ஆணைக்கு ராணி கீழ்ப்படியவில்லை என்றவுடன் ராஜா மூர்க்க வெறிகொண்டான் என்பதை நேற்று பார்த்தோம். முதலாவதாக மூர்க்க வெறி அல்லது கடுங்கோபம் இருக்கும்போது எடுக்கப்படும் தீர்மானங்கள் அநேகமாகத் தவறாகத்தான் இருக்கும். நாம் கோபத்தில் எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுக்கக் கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, அகாஸ்வேருவின் மூர்க்கம் தணிந்தபோதும் அவன் வஸ்தியைக் குறித்து எடுத்த முடிவு தவறு என்பதை அவன் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. வீண் கெளரவமும், தவறான ஆலோசனையும் ராஜாவின் வாழ்க்கையை வேறு திசையில் கொண்டு போகின்றன. இந்த நாட்களிலும் கெளரவம் என்ற பெயரில் அழிக்கப்பட்டுள்ள குடும்ப உறவுகளும் நட்புக்களும் ஏராளம். வீண் கெளரவமும் தவறான ஆலோசனைகளும் உன் குடும்பத்தையோ அல்லது நட்பையோ அழித்துவிடாதபடி உன்னைக் காத்துக் கொள்.                  

ஜெபம்

ஆண்டவரே, மூர்க்கம், வீண் கெளரவம், தவறான ஆலோசனைகள் ஆகியவைகளிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.