காலைத் தியானம் – அக்டோபர் 07, 2020

எஸ்தர் 2: 5 – 10                     

எஸ்தரும் ராஜாவின் அரமனைக்கு அழைத்துக் கொண்டுபோகப்பட்டு . . .           

அகாஸ்வேரு செய்த அநேக அநியாயங்களையும் தவறுகளையும் குறித்து தியானித்தோம். அந்த அநியாயங்களின் மத்தியிலும், தவறுகளின் மத்தியிலும்கூட  கர்த்தருடைய வேலை நடக்கிறது. கர்த்தர் எஸ்தரை ராஜாவின் அரண்மனைக்குக் கொண்டுவந்துவிட்டார். இந்த நியாயமும் நேர்மையும் இல்லாத உலகில், கர்த்தருடைய திட்டம் ஆயிரக்கணக்கான வருடங்களாக நிறைவேறிக் கொண்டேதானிருக்கிறது. கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கென்று வைத்திருந்த திட்டத்தைக் குறித்து வரும் நாட்களில் தியானிக்கப் போகிறோம். இன்று, இந்த அக்கிரமம் நிறைந்த உலகில் உன் மூலமாகவும் என் மூலமாகவும் கர்த்தருடைய திட்டம் நிறைவேறுகிறதா என்பதைக் குறித்து யோசிப்போமாக! உலகில் இருக்கும் கலவரத்தின் நடுவே, கர்த்தருடைய சத்தம் உனக்குக் கேட்கிறதா?                 

ஜெபம்

ஆண்டவரே, என்னைச் சுற்றி நடக்கும் கலவரங்களின் மத்தியிலும் உம்முடைய சத்தத்தைக் கேட்டு அதன்படி செயல்பட எனக்குக் கிருபை தாரும். ஆமென்.