எஸ்தர் 2: 11 – 20
எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது
மனிதர் கண்களில் தயைக் கிடைக்கச் செய்கிறவர் கர்த்தர். நாம் எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் இருந்தாலும், சூழ்நிலையை மாற்றக்கூடியவர் நம் கர்த்தர். எப்படிப்பட்ட கல்நெஞ்சர்களின் மத்தியில் இருந்தாலும் கல்நெஞ்சை உருக்குகிறவர் நம்முடைய கர்த்தர். லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்காது என்று நாம் நினைக்கும் இடங்களில்கூட கர்த்தர் கிரியை செய்கிறதை நாம் பார்க்கிறோம். ஒருவருக்கும் இப்படிப்பட்ட காரியத்தை அவர் லஞ்சம் வாங்காமல் செய்தது கிடையாது; எனக்கு மாத்திரம் அவர் எப்படிச் செய்தார் என்று தெரியவில்லை என்று சொல்லிவிடுகிறோம். அது கர்த்தருடைய கிரியை என்பதை இனிமேலாவது தெரிந்து கொள்வோம். இது தற்செயலாக நடந்தது என்று சொல்லிவிடுகிறோம். எதுவும் தற்செயலாக நடப்பதே கிடையாது என்பதையும் புரிந்துகொள்வோம்.
ஜெபம்
ஆண்டவரே, உமக்கு முடியாதது எதுவும் கிடையாது. கடினமான சூழ்நிலைகளை நான் எதிர்கொள்ளும்போது, மனிதர் கண்களிலேயும் தயவு கிடைக்கும்படி எனக்கு உதவி செய்யும். ஆமென்.