காலைத் தியானம் – அக்டோபர் 10, 2020

எஸ்தர் 3: 1 – 6                           

மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை                 

கர்த்தர் அதிகாரத்தைக் கொடுத்து பொறுப்பான பதவிகளில் வைத்திருப்பவர்களுக்கு மரியாதைக் கொடுக்க வேண்டும். அதைத்தான் வேதாகமத்தில் பார்க்கிறோம். ஆனால் மரியாதைக் கொடுப்பதற்கும் வணங்குவதற்கும் வித்தியாசம் உண்டு. இன்று அரசியலில் தலைவர்களின் கால்களில் விழுந்து வணங்குவது சாதாரண பழக்கமாகிவிட்டது. இதை அரசியல் தலைவர்கள் பலரும் விரும்புகிறார்கள். அப்படிச் செய்தால் மாத்திரமே தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளமுடியும் என்பதால்தான் இந்த பழக்கம் தொடருகிறது. இன்று இது அரசியலில் மாத்திரமல்ல, சில கிறிஸ்தவர்களிடையேயும் காணப்படுகிறது. உன் தேவனாகிய கர்த்தரைத் தவிர வேறே யாரையும் அல்லது எதையும் வணங்கக் கூடாது என்பது கர்த்தருடைய பத்து கற்பனைகளில் பிரதான கற்பனை.  நீ உன் ஆண்டவரைத் தவிர வேறே யாரையும் அல்லது எதையும் வணங்கவேண்டாம்.             

ஜெபம்

ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு யாரையும் வணங்காதபடி என் இருதயத்தைக் காத்துக் கொள்ளும். ஆமென்.