காலைத் தியானம் – அக்டோபர் 12, 2020

எஸ்தர் 4: 1 – 8                             

ராஜாவினிடத்திற்போய். . .  தன் ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணவும் மன்றாடவும் . . .            

மொர்தெகாய், தான் ராஜாவின் உத்தரவை மீறும்போது தன்னுடைய உயிருக்கு ஆபத்து வரும் என்று எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் மொத்த யூத சமுதாயத்துக்கே ஆபத்து என்பதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மொர்தெகாயும் மற்ற யூதர்களும் தங்கள் உடைகளைக் கிழித்து, சாக்குத்துணிகளைப் போட்டுக் கொண்டு, சாம்பலைத் தூவிக் கொண்டு தங்களின் ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தினார்கள். மொர்தெகாய் செயல்படும் ஒரு மனிதன். அழுதுகொண்டு சும்மாயிருக்கவில்லை. எஸ்தர் மூலமாக ராஜாவிடம் போகத் தீர்மானித்துவிட்டான். ராஜா போட்ட சட்டத்தைக் குறித்து ராஜாவிடம் மாத்திரம் தானே முறையிட முடியும்! ராஜா மாத்திரம்தானே அந்த சட்டத்தை மாற்ற முடியும்! கர்த்தருடைய சட்டத்தை மீறினால், நீ பெற வேண்டிய தண்டனையையும் பின் விளைவுகளையும் கர்த்தர் மாத்திரம்தான் மாற்றமுடியும். அவர் தமது சட்டத்தை மாற்ற மாட்டார். ஆனால் தண்டனையிலிருந்து உன்னைத் தப்புவிக்க அவர் இரக்கமுள்ளவராயிருக்கிறார். அவருடைய இரக்கத்துக்காக மன்றாடு.        

ஜெபம்

ஆண்டவரே, என் பாவத்துக்காக என்னையும் என் சந்ததியாரையும் தண்டியாதேயும். என்னை மன்னியும். என் மீது இரங்கும். ஆமென்.