காலைத் தியானம் – அக்டோபர் 14, 2020

எஸ்தர் 5: 1 – 8                              

நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் உனக்குக் கொடுக்கப்படும்            

எஸ்தர் நன்றாக யோசித்து, மொர்தெகாயின் யோசனையின்படி ராஜாவிடம் மன்றாட முடிவு செய்துவிட்டாள். நான் மரித்தாலும் பரவாயில்லை; ராஜாவின் சட்டத்தையும் மீறி அவர் அழைக்காமலேயே அவரிடம் செல்வேன் என்று சொல்லிவிட்டாள். அது மாத்திரமல்ல, மொர்தெகாயையும் மற்ற யூதர்களையும் தனக்காக உபவாசித்து ஜெபிக்கும்படி கேட்கிறாள். அதன்பின் செயல்பட ஆரம்பித்தாள். இன்று நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் சில உண்டு. எஸ்தர் தனக்குக் கிடைத்த முதல் தருணத்திலேயே தன் மனதிலிருப்பவற்றை ராஜாவிடம் சொல்லவில்லை. அவள் மிகவும் கவனமாக, தான் பேசுவதற்கேற்ற சரியான தருணத்தை உருவாக்குவதைக் கவனியுங்கள். இன்றும் நாம் சொல்வது சரியாக இருந்தாலும், சொல்லும் நேரமும் விதமும் சரியாக இல்லாததால், அநேகக் காரியங்களில் தோல்வியடைகிறோம். அநேக உறவுகளை முறித்துவிடுகிறோம். மேலும் ஆபத்தான ஒரு சூழ்நிலைக்குள் அடியெடுத்து வைக்க வேண்டிய தருணம் வந்தால், விசுவாசிகளின் ஜெப அரவணைப்பு நமக்கும் தேவை. எஸ்தரின் விவேகத்தைப் பார்த்து நாமும் கற்றுக் கொள்வோம்.      

ஜெபம்

ஆண்டவரே, யாரிடம் எதை எப்படி பேச வேண்டும் என்பதைத் தெரிந்து செயல்படும் ஞனத்தை எனக்குத் தாரும். ஆமென்.