எஸ்தர் 7: 5 – 10
ஆமான் ஆயத்தம்பண்ணின தூக்கு மரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்
ஒரு சில நிமிடங்களில் ஆமானின் நிலை தலை கீழாக மாறிவிட்டது. மொர்தெகாய் தூக்கில் போடப்படுவான் என்று கனவு கண்டுக்கொண்டிருந்த ஆமான் தூக்கிலிடப்படுகிறான். நீதிமொழிகள் 26:27 என்ன சொல்லுகிறது என்பதைக் கவனியுங்கள். “படுகுழியை வெட்டுகிறவன், தானே அதில் விழுவான். கல்லைப் புரட்டுகிறவன் மேல் அந்தக் கல் திரும்ப விழும்.” ஆமானின் வாழ்க்கையில் இது நிறைவேறிற்று. நாம் ஒருபோதும் மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய நினைக்கக் கூடாது. கர்த்தருக்கு விரோதமாக, அநியாயமாக செயல்படுகிறவர்களைக் கூட நியாயந்தீர்ப்பதும், தண்டனைக் கொடுப்பதும் கர்த்தருடைய வேலை.
ஜெபம்
ஆண்டவரே, எனக்கு விரோதமாகச் செயல்படுகிறவர்களுக்குக் கூட தீங்கு நினைக்காத உள்ளத்தை எனக்குத் தாரும். ஆமென்.