காலைத் தியானம் – அக்டோபர் 20, 2020

எஸ்தர் 8: 7 – 12                                  

ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடப் பட்டதைச் செல்லாமற்போகப்பண்ண ஒருவராலும் கூடாது          

ராஜாவின் முத்திரையோடு ஒரு சட்டம் அல்லது தீர்ப்பு எழுதப்பட்டுவிட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. ஒரு குறிப்பிட்ட நாளில் யூதர்களைக் கொல்ல அவர்களுடைய எதிரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு விட்டது. இப்போது அதை மாற்ற முடியாது. ஆகையால் ராஜா யூதருக்கு சாதகமாக வேறே என்ன வேண்டுமானாலும் என் முத்திரையின் கீழ் எழுதிக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார். பாவத்தின் சம்பளம் மரணம் என்பது கர்த்தர் எழுதிவிட்ட சட்டம். அதை மாற்ற யாராலும் முடியாது. பாவத்தில் விழுந்துவிட்ட மனிதன் கர்த்தரை நோக்கிக் கெஞ்சும்போது மனிதனுக்குச் சாதமாகக் கர்த்தர் வேறு ஒரு வழியை உருவாக்கினார். அதன் படி, திரியேக தேவனில் ஒருவரான இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து, நம்முடைய பாவங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்துவிட்டார். எந்த மனிதனும் அழிக்கப்படவேண்டும் என்பது கர்த்தருடைய சித்தம் அல்ல. அதற்காகவே அவருடைய இரண்டாம் வருகைக்கு முன் இவ்வளவு வருடங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. காலத்தை ஆதாயப்படுத்திக் கொள்வோம்.             

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய சட்டத்தின் தண்டனையிலிருந்து நான் காப்பாற்றப்படுவதற்காக வேறு வழியை உண்டாக்கி, இயேசு கிறிஸ்துவை எனக்காக சிலுவையைச் சுமக்கச் செய்த உம் அன்பிற்காக நன்றி சுவாமி. ஆமென்.