காலைத் தியானம் – அக்டோபர் 22, 2020

எஸ்தர் 9: 1 – 15                                          

ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை         

1 சாமுவேல் 15ம் அதிகாரம் முழுவதையும் வாசியுங்கள். இப்போது 9, 18, 19ம் வசனங்களைக் கவனியுங்கள். சவுல் ராஜாவுக்கு அமலேக்கியரை முற்றிலும் அழிக்கவேண்டும் என்றும் அவர்களிடமிருந்து ஒரு பொருளையும் கொள்ளையாகக் கொண்டு வரக் கூடாது என்றும் கர்த்தர் சொல்லியிருந்தார். ஆனால் சவுல் கீழ்ப்படியவில்லை. சவுல் கர்த்தருக்கு மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கினான்.  மொர்தெகாயின் நாட்களில் யூதர்களுக்கு எதிரிகளின் பொருட்களைக் கொள்ளையிடும் உரிமை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் யூதர்கள் பொருட்கள் மீது தங்கள் கைகளை வைக்கவில்லை. அவர்களுடைய ஒரே குறிக்கோள், எதிரிகளை அழிப்பதிலேயே இருந்தது. அவர்களுடைய முற்பிதாக்கள் செய்த தவறை அவர்கள் செய்ய விரும்பவில்லை. உன் வாழ்க்கையிலும் பண ஆசையும் பொருள் ஆசையும் உன்னைத் திசை திருப்பி விடாமல் உன்னைக் காத்துக் கொள்.         

ஜெபம்

ஆண்டவரே, பொருளாசை என்னை உம்முடைய பாதையிலிருந்து மாற்றிவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.