காலைத் தியானம் – அக்டோபர் 23, 2020

எஸ்தர் 9: 16 – 23                                             

சஞ்சலம் சந்தோஷமாகவும் . . . துக்கம் மகிழ்ச்சியாகவும்        

யூதர்களுக்கு சஞ்சலம் சந்தோஷமாக மாறிற்று. துக்கம் மகிழ்ச்சியாக மாறிற்று. இது யூதர்களின் சரித்திரத்தில் முதல் முறையாக நடக்கவில்லை. ஆனாலும் அவர்கள் வெகு விரவில் கர்த்தரை மறந்தவர்களாகவே வாழ்ந்து வந்தார்கள். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் மனிதர்களுக்கு துக்கமும் சஞ்சலமும் வராது என்று வேதம் சொல்லவில்லை. ஆகையால் நம் ஒவ்வொருவருக்கும் துக்கமும் சஞ்சலமும் வருவதைத் தடுக்கமுடியாது. கிறிஸ்துவைப் பிடித்துக் கொள்ளுகிறவர்களுக்கு சஞ்சலம் சந்தோஷமாகவும், துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறும். துக்கத்தின் வழியாகக் கடந்து செல்லும் நாட்களில் அவிசுவாசியைப் போல் வாழாமல், உன் விசுவாசத்தை வெளிப்படுத்து. கர்த்தர் உன்னைவிட்டு விலகுவதில்லை.         

ஜெபம்

ஆண்டவரே, துக்கத்தின் வழியாக நான் கடந்து செல்லும்போது என் கையைப் பிடித்து வழிநடத்தும். என் துக்க நாட்களை இன்ப நாட்களாக மாற்றும். ஆமென்.