காலைத் தியானம் – அக்டோபர் 25, 2020

எஸ்தர் 10: 1 – 3                                            

மொர்தெகாய் . . .  யூதருக்குள் பெரியவனும் . . பிரியமானவனும் . .  சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்       

மொர்தெகாய் ராஜாவின் அரண்மனையில் ஒரு சாதாரண ஊழியனாக இருந்து, கொல்லப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு, பின்பு ராஜாவுக்கு அடுத்த நிலைக்கு (இரண்டாவது நிலைக்கு) உயர்த்தப்பட்டுவிட்டான். பதவி உயர்ந்ததும் எல்லாரும் பெரியவன் என்று நினைப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் மக்களுக்குப் பிரியமானவனாயிருப்பது கடினம். இன்று உயர்ந்த பதவியில் இருக்கும் எல்லாருக்கும் வெளிப்பார்வையில் மரியாதை கிடைக்கிறது. அது உண்மையான,  பிரியத்தின் அடிப்படையில் உருவான மரியாதையா என்பது ஒருவன் அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் தான் தெரியும். நாட்டின் பிரதம மந்திரியிலிருந்து கம்பெனிகளின் தலைவர்கள், நிர்வாகங்களின் தலைவர்கள் ஆகியோர் வரை யாரைப் பார்த்தாலும் மொர்தெகாய் போன்ற தலைவர்களைக் காண முடிகிறதில்லை. அது மாத்திரமல்ல, திருச்சபைகளுக்குள்ளும் கட்சிகள் உருவாகிவிட்ட இன்றைய நிலையை மாற்றி, எல்லா சபையினர் மத்தியிலும் சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய சபைத் தலைவர்கள் (Lay Leaders) இன்று மிகவும் தேவை.                                       

ஜெபம்

ஆண்டவரே, எங்கள் திருச்சபையிலும் மொர்தெகாய் போன்ற தலைவர்களையும் எஸ்தர் போன்ற தலைவிகளையும் உருவாக்கும். ஆமென்.