யோபு 1: 1 – 5
அவர்களை அழைத்தனுப்பி பரிசுத்தப்படுத்தி
யோபு உத்தமன் என்றும் சன்மார்க்கன் என்றும் தேவனிடமிருந்தே நற்சான்றிதழ் பெற்றான். அவன், தான் உத்தமனாகவும் சன்மார்க்கனாகவும் இருக்கவேண்டும் என்று மாத்திரம் நினைக்கவில்லை. தன் பிள்ளைகளில் ஒவ்வொருவரும் தன்னைப் போலவே சன்மார்க்கராக இருக்கவேண்டும் என்றும் விரும்பினான். தன்னுடைய பிள்ளைகள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பாவம் செய்திருக்கக் கூடும் என்று நினைத்து, அவர்களை அடிக்கடிப் பரிசுத்தப்படுத்தினான். உன்னை தேவன் சன்மார்க்கன் என்றும் உத்தமன் என்றும் அழைப்பாரா? உன் பிள்ளைகளின் ஆத்துமாக்களுக்காக நீ என்ன செய்கிறாய்? அவர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யும் பாவங்களிலிருந்து கழுவப்படும்படி அவர்களுடன் சேர்ந்து ஜெபித்து அவர்கள் பரிசுத்தமாக்கப்பட உதவுகிறாயா?
ஜெபம்
ஆண்டவரே, என் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் இரட்சிப்பின் அனுபவத்தையும் உம்மோடு பரலோகத்தில் வாழும் பாக்கியத்தையும் தாரும். ஆமென்.