யோபு 1: 6 – 12
நீர் வேலியடைக்கவில்லையா?
சாத்தானைக் குறித்து அலட்சியமாக இருப்பவர்கள் அநேகர் உண்டு. சாத்தானின் சக்தியை மிகைப் படுத்தி அவனை தேவனுக்கு அடுத்த நிலையில் வைத்துவிடுகிறவர்களும் அநேகர் உண்டு. இந்த இரண்டு அணுகுமுறைகளுமே தவறுதான். சாத்தான் யாரை விழுங்கலாம் என்று சுற்றித் திரிகிறான். ஆகையால் அவனைக் குறித்து அலட்சியமாக இருக்கக் கூடாது. அதே சமயம் தேவனுடைய பிள்ளைகளை அவனால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால் அவனைக் குறித்து நாம் பயப்படவேண்டியதும் இல்லை. உன்னைச் சுற்றியும், உன் குடும்பத்தைச் சுற்றியும், உனக்குச் சொந்தமானவைகள் எல்லாவற்றைச் சுற்றியும் உன் தேவன் வேலியடைத்துவிட்டால், சாத்தான் உன்னை நெருங்கவே முடியாது.
ஜெபம்
ஆண்டவரே, என்னைச் சுற்றியும் என் குடும்பத்தைச் சுற்றியும் நீர் வேலியடைத்துவிடும். ஆமென்.