யோபு 1: 13 – 22
கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்
நன்மைகளைப் பெறும்போது கர்த்தரைத் துதிப்பது எளிது. வேலை உயர்வைப் பெறும்போது அல்லது புது வீட்டைக் கட்டி முடிக்கும்போது கர்த்தரைத் துதிப்பது நமக்கு எளிது. ஒரு வேளை நாம் நமது வேலையை இழக்க நேரிட்டால், அல்லது தொழிலில் பெரும் இழப்பு நேரிட்டால், அல்லது வீடு போன்ற சொத்துக்களை இழக்க நேரிட்டால், அப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் நம்மால் கர்த்தரைத் துதிக்க முடியுமா? நமது குடும்பங்களில் ஒரு குழந்தை பிறக்கும்போது கர்த்தரைத் துதிக்கிறோம். நமக்கு அருமையானவர்கள் மரிக்கும் போது, கர்த்தரைத் துதிக்க முடிகிறதா? யோபின் சரித்திரத்திலிருந்து நாம் படிக்கும் மிகப்பெரிய பாடம், எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரைத் துதிக்கவேண்டும் என்பதுதான். அது தான் விசுவாசத்தின் உச்சக்கட்டம்.
ஜெபம்
ஆண்டவரே, நான் துன்பங்களைச் சந்திக்கும்போதும் நீர் என்னோடு இருக்கிறீர் என்பதை உணர உதவி செய்யும். ஆமென்.