காலைத் தியானம் – அக்டோபர் 29, 2020

யோபு 2: 1 – 10                                                   

இன்னும் உம் உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ?      

இந்த வார்த்தைகளை சாத்தான் சொல்லவில்லை. யோபு உயிருக்கு உயிராக நேசித்த அவனுடைய மனைவிதான் இவ்விதமாகப் பேசுகிறாள். நம்முடைய குடும்பத்தினர் மூலமாக நம்முடைய விசுவாசம் உறுதிப்படும் தருணங்கள் ஏராளம் உண்டு. ஆனால் உனக்கு அருமையானவர்கள் மூலமாகவே, உன் விசுவாசம் அசைக்கப்படும் தருணமும் வரலாம். விசுவாசத்தில் உறுதியாய் இரு. உன் ஆண்டவரின் எண்ணங்களும் அவர் உனக்காக வைத்திருக்கும் திட்டங்களும், உன் கணவன், மனைவி, தாய், தகப்பன் போன்றவர்கள் உனக்காக வைத்திருக்கும் திட்டங்களைவிட மிகவும் மேலானது. சாத்தான் உன்னை எந்த மனிதன் மூலமாகவும் சோதிக்கலாம் என்பதை மறந்து விடாதே.

ஜெபம்

ஆண்டவரே, சாத்தானுடைய குறிக்கோள் என் வாழ்க்கையில் நிறைவேறிவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.