காலைத் தியானம் – அக்டோபர் 30, 2020

யோபு 2: 11 – 13                                                     

ஒரு வார்த்தையும் பேசாமல்        

யோபு அனுபவித்த துன்பங்களையும் அதிர்ச்சிகளையும் குறித்து கேள்விப்பட்ட மூன்று நண்பர்கள் அவனுக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமென்று வெவ்வேறு இடங்களிலிருந்து புறப்பட்டு வந்துவிட்டார்கள். இதைவிட நட்புக்கு மேலான உதாரணம் ஒன்று உண்டோ? உன் நண்பன் அல்லது தோழிக்கு வரும் துன்பத்தைப் பார்த்து ஐயோ பாவம் என்று சொல்லிவிட்டு ஒன்றும் செய்யாமல் இருந்துவிடுகிறாயோ? யோபின் நண்பர்கள் யோபுக்கு ஆறுதலாயிருக்கும் விதத்தைக் கவனியுங்கள். இரவும் பகலுமாக ஏழு நாட்கள் யோபோடு ஒரு வார்த்தையும் பேசாமல் உட்கார்ந்து இருந்தார்கள். சில தருணங்களில் நாம் வேதனைப் படுகிறவர்களின் அருகில் இருப்பதுதான் ஆறுதல். வார்த்தைகளைக் கொட்ட வேண்டிய அவசியமில்லை.           

ஜெபம்

ஆண்டவரே, நான் மற்றவர்களுக்கு எப்படி ஆறுதலாயிருக்க வேண்டும் என்பதை எனக்குப் போதியும். ஆமென்.