காலைத் தியானம் – நவம்பர் 01, 2020

யோபு 4: 1 – 4                                                    

நீர் அநேகருக்குப் புத்தி சொல்லி . . . திடப்படுத்தினீர்        

வார்த்தைகளுக்கு மிகுந்த வலிமை உண்டு. கடந்த காலங்களில் யோபு பலருக்கு ஆலோசனை சொல்லி, ஆறுதல் சொல்லி, இளைத்த கைகளைத் திடப்படுத்தியிருந்தான் என்று பார்க்கிறோம். ஒருவனுடைய வார்த்தைகள், துன்பங்களை அனுபவித்து தோல்வியைத் தழுவி உடைந்த உள்ளத்தோடு இருக்கும் மற்றொருவனை ஊக்குவித்து, பெலப்படுத்தித் தூக்கி நிறுத்தலாம். அல்லது அவனை மேலும் நொறுக்கிக் காயப்படுத்தலாம்.  யோபுவின் நண்பர்களில் ஒருவனான எலிப்பாஸ் ஏழு நாட்கள் கடைப்பிடித்த அமைதியைக் கலைத்து பேச ஆரம்பிக்கிறான். அவனுடைய வார்த்தைகள் யோபுவுக்கு ஆறுதலோ அல்லது ஊக்கமோ கொடுக்கவில்லை என்பதை வரும் நாட்களில் பார்க்கவிருக்கிறோம். உன் வார்த்தைகள் யோபுவின் வார்த்தைகளைப் போல துன்பத்திலிருக்கும் மற்றவர்களைத் திடப்படுத்துகின்றனவா அல்லது எலிப்பாசின் வார்த்தைகளைப் போல மற்றவர்களைப் புண்படுத்துகின்றனவா? சரியான நோக்கத்தோடு, சரியான நேரத்தில், சரியான விதத்தில் சொல்லப்படும் வார்த்தைகளுக்கு மற்றவர்களைப் பலப்படுத்தும் வலிமை உண்டு.        

ஜெபம்

ஆண்டவரே, எனக்கு சரியான நோக்கத்தோடு, சரியான நேரத்தில், சரியான விதத்தில் பேசும் ஞானத்தைத் தாரும்.  ஆமென்.