காலைத் தியானம் – நவம்பர் 04, 2020

யோபு 5: 1 – 7                                                    

அவன் பிள்ளைகள் . . . வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்       

எலிப்பாசின் குற்றச்சாட்டுக்கு இரண்டாவது ஆதாரமாகத் தன் அனுபவங்களைக் குறிப்பிடுகிறான். ஒரு நிர்மூடன் வேரூன்றி செழிக்கிறதைக் கண்டானாம். ஆனால் அது வெகு காலம் நீடிக்காமல், அவனுடைய பிள்ளைகள் இரட்சிப்பு இல்லாமல் வாசலிலே நொறுக்கப்பட்டார்களாம். யோபு தனக்கிருந்த பல சொத்துக்களையும், பிள்ளைகளையும் இழந்து, தானும் வியாதியினால் அவதிப்படும்போது ஒரு நண்பன் சொல்லுகிற வார்த்தைகளா இவை? அந்த வார்த்தைகள் யோபுவை எப்படி வதைக்கும் என்பதை எலிப்பாஸ் நினைக்கவேயில்லை. எலிப்பாஸ் யோபுவின் வார்த்தைகளுக்குத் தன்னுடைய சொந்த  அறிவின் அடிப்படையில் பதில் சொல்கிறதைப் பார்க்கிறோம்.  அவன் யோபுவின் உள்ளத்தின் குமுறல்களுக்குத் தன்னுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து, ஊக்கம் கொடுக்கும் வார்த்தைகளைச் சொல்லவில்லை.  துன்பத்தில் வாடுகிறவர்கள் உன்னிடம் தங்கள் வார்த்தைகளுக்கு அறிவுப் பூர்வமான பதிலை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தங்கள் உள்ளத்தின் வேதனைகளுக்கு ஆறுதலை மாத்திரம் தான் எதிர்பார்க்கிறார்கள்.                

ஜெபம்

ஆண்டவரே, துன்பத்தில் வாடுகிறவர்களுக்கு ஆறுதல் கொடுக்கிறவனா(ளா)க என்னை உபயோகியும். ஆமென்.