யோபு 6: 15 – 30
நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்
யோபு தன் நண்பர்களிடம் எந்த விதமான உதவியையும் கேட்கவில்லை. தாங்களாகவே உதவி செய்கிறோம் என்று வந்த நண்பர்களோ, நொந்துபோன மனதை மேலும் புண்படுத்திவிட்டார்கள். அந்த சூழ்நிலையிலும் யோபு, தான் ஒருவேளை தெரியாமல் செய்துவிட்ட பாவம் எதாவது இருக்குமானால் அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறான். அநியாயமாய்க் குற்றம் சாட்டப்படும் தருணங்களில் கூட, தன்னிடம் சரி செய்துகொள்ள வேண்டிய குறைகள் உண்டா என்று ஆராய்ந்து பார்ப்பது நீதிமானின் குணம். மேலும் உன் நலனில் அக்கறை உள்ளவர்கள் உன் குறைகளைச் சுட்டிக்காட்டினால் அவர்கள் உன் நலனுக்காகத்தான் பேசுகிறார்கள் என்று அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உன்னிடம் உண்டா? அல்லது உன் செயல்களை நியாயப்படுத்திக் கொண்டு இருந்து விடுகிறாயா?
ஜெபம்
ஆண்டவரே, பிறர் என் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை எனக்குத் தாரும். ஆமென்.