காலைத் தியானம் – நவம்பர் 09, 2020

யோபு 7: 1 – 21                                                

மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கு. . . .  அவன் எம்மாத்திரம்?     

மேலும் மேலும் துன்பங்களைக் கொடுத்தால் யோபு தேவனைத் தூஷித்துவிடுவான் என்பது சாத்தானின் கணிப்பு. யோபு அப்படி தூஷிக்கமாட்டான் என்பது தேவனின் நம்பிக்கை. யோபு நொறுக்கப்படுகிறான். ஆனால் தேவனுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. அது மாத்திரமல்ல. யோபு தன்னைத் தாழ்த்துகிறதைக் கவனியுங்கள். நான் விவரிக்கமுடியாத அளவுக்குத் துன்பங்களை அனுபவிக்கிறேன். நீர் என்னை இந்த துன்பங்களிலிருந்து விடுவியும் என்று கேட்பதற்குக் கூட நான் தகுதியற்றவன். ஆகையால் நான் மரிக்கும்படி என்னை விட்டுவிடும் என்று கேட்கிறான். கர்த்தர் உன் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையினிமித்தம் தான் உன் பொறுப்பில் உன் குடும்பத்தையும், வேலையையும், நண்பர்களையும் கொடுத்திருக்கிறார். நீ அந்த நம்பிக்கைக்குப் பாத்திரனாக நடந்து கொள்.         

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரனாக நடந்துகொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.