காலைத் தியானம் – நவம்பர் 10, 2020

யோபு 8: 1 – 10                                                 

சர்வ வல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?    

இரண்டாவது நண்பனான பில்தாத் இப்போது பேச ஆரம்பித்து விட்டான். அவனும் எலிப்பாஸ் விட்ட இடத்தில் தொடருகிறான். கர்த்தர் நீதியுள்ளவர்; ஆகையால் நீதிமான்களுக்கு துன்பம் வரமுடியாது என்னும் வாதத்தைத் தொடருகிறான். கர்த்தர் நீதியுள்ளவர் என்பது முற்றிலும் சரியே. ஆனால் அந்த உண்மையை யோபுவுக்கு உபயோகித்த விதத்தில்தான் தவறு இருக்கிறது. இன்று வேதாகமத்தை முழுவதுமாகப் புரிந்து கொள்ளாமல் ஒரு சில சத்தியங்களை மாத்திரம் மேற்கோள் காட்டி, தவறான போதனைகளை மக்களுக்குச் சொல்லும் போதகர்கள் அநேகர் இருக்கிறார்கள். இன்று, அந்த போதகர் அப்படிச் சொன்னாரே, இந்த போதகர் இப்படிச் சொன்னாரே என்று பல குழப்பங்களுடனும், சந்தேகங்களுடனும் வருபவர்கள் பலர் உண்டு.  போதகர்கள் வாக்கை வேத வாக்காக நினைக்காதீர்கள்; வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை வாசித்து தியானியுங்கள் என்பதே அவர்களுக்கு நாம் சொல்லக் கூடிய சிறந்த ஆலோசனை. சரியான போதனைகளையும் தவறான போதனைகளையும் பகுத்துணரும் ஞானத்தைக் கர்த்தர்தாமே நமக்குத் தருவாராக.        

ஜெபம்

ஆண்டவரே, தவறான போதனைகளிலிருந்து என்னை விலக்கிக் காரும். ஆமென்.