யோபு 9: 1 – 13
தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?
யோபுவின் பதில் இந்த அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. யோபு அனுபவிக்கும் துன்பங்கள் அவன் செய்த குற்றங்கள் அல்லது பாவங்களுக்காக அல்ல என்பது யோபுவுக்குத் தெரியும். கர்த்தருக்கும் தெரியும். அவன் நண்பர்களோ யோபுவைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்துவிட்டார்கள். யோபுவுக்குத் தன்னுடைய பெயரைக் காப்பாற்ற என்ன வழி இருக்கிறது? கர்த்தரே வந்து யோபு குற்றவாளி அல்ல என்று சொன்னால்தானே முடியும்? ஆனால் கர்த்தருடைய அளவுகோலின்படி யார் தன்னை நீதிமான் என்று சொல்லமுடியும்? யோபுவின் மனதில் இருந்த இப்படிப்பட்ட பலவித குழப்பங்கள் உன் மனதிலும் தோன்றும் தருணங்கள் வரலாம். நீ மனிதனுக்கு முன்பாக உன்னை நீதிமான் என்றோ அல்லது குற்றமற்றவன் என்றோ நிரூபித்துக் காட்டவேண்டிய அவசியமில்லை. உன் ஆண்டவரோடுள்ள உறவுக்கு மாத்திரம் முதலிடம் கொடு. மற்றவைகளைக் குறித்து கவலைப் படாதே.
ஜெபம்
ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர் மாத்திரமல்ல, என்னை நேசிக்கிறவர் என்பதையும் அறிவேன். நான் துன்பங்களைக் கடந்து செல்ல நேரிட்டால், அதற்கு வேண்டிய பெலனை எனக்குத் தாரும். ஆமென்.