காலைத் தியானம் – நவம்பர் 15, 2020

யோபு 11: 1 – 20                                              

உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லை

இப்போது மூன்றாவது நண்பனாகிய சோப்பார் பேசத் தொடங்கிவிட்டான். எலிப்பாசும், பில்தாத்தும், யோபுவும் பேசிய எல்லாவற்றையும் கேட்டபின் சோப்பார் யோபுவின் நிலையைக் கொஞ்சமாவது புரிந்து கொள்வான் என்று எதிர்பார்த்தால், அவனுடைய வார்த்தைகள் யோபுவை இன்னும் அதிகமாகப் புண்படுத்துபவைகளாக இருக்கின்றன. யோபு பெரிய குற்றவாளி என்றும், அவன் கர்த்தருடைய ஞானத்தின் நீளத்தையும் அகலத்தையும் ஆழத்தையும் உயரத்தையும் அறியாதவன் என்றும், அவன் தன் அக்கிரமங்களிலிருந்து விலக வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறான். ஒரு நண்பனின் உள்ளத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் அவனைக் குறித்து கடுஞ்சொற்களைச் சொல்லும் இவர்கள் உண்மையிலே நண்பர்களா? நீ நண்பர்கள் என்று நினைத்தவர்கள்கூட உன்னைக் குற்றம் செய்தவன் என்று சொல்லி, உன்னை விட்டு விலகிப் போய்விட்ட அனுபவம் உனக்கு உண்டா?

Do thy friends despise, forsake thee?
Take it to the Lord in prayer;
In His arms He’ll take and shield thee,
Thou wilt find a solace there
.

What a friend we have in Jesus!

ஜெபம்

ஆண்டவரே, என்னைக் கைவிடாத பிராண நண்பராயிருப்பதற்காக நன்றி சுவாமி. ஆமென்.