காலைத் தியானம் – நவம்பர் 17, 2020

யோபு 13: 1 – 28                                              

நீங்கள் . . .  காரியத்துக்குதவாத வைத்தியர்கள்

யோபுவின் நண்பர்கள் தேவனைப் பற்றி நன்றாக அறிந்திருந்தார்கள். ஆனால் யோபுவுக்கு அவர்களுடைய அறிவினால் எந்த பிரயோஜனமும் இல்லை. நோயாளியைக் குணப்படுத்த உபயோகிக்காவிட்டால், வைத்தியரின் அறிவினால் யாருக்கு என்ன பயன்? ஒருவேளை நம்முடைய பக்தியும், தேவனைப் பற்றிய அறிவும் அப்படித் தான் இருக்கிறதோ? உனக்குக் கர்த்தரைத் தெரியும் என்று சொல்லிக்கொள்ளுகிறாய். உன்னைச் சுற்றி அறியாமையினால் மடிந்து கொண்டிருக்கும் மக்களைத் தூக்கிவிடாவிட்டால், நீ கிறிஸ்தவனாயிருப்பதால் என்ன பயன்? உன்னுடைய பக்தியும் காரியத்துக்கு உதவாத வைத்தியரைப் போன்றதுதானே!

ஜெபம்

ஆண்டவரே, நோயாளிக்கு உபயோகப்படாத வைத்தியனாக நான் வாழாதபடி என்னை எடுத்து உபயோகப்படுத்தும். ஆமென்.