காலைத் தியானம் – நவம்பர் 18, 2020

யோபு 14: 1 – 22                                              

மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?

ஒரு மரத்தை வெட்டிப் போட்டால், அது மறுபடியும் துளிர்விட்டு, வளர்ந்து, தழைக்கும். ஆனால் மரித்த மனிதன் எப்படி பிழைப்பான் என்பது யோபுவின் கேள்வி. மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து பழைய ஏற்பாட்டில் சொல்லப்படவில்லை. ஏனென்றால் அது இயேசு கிறிஸ்து மரணத்தை மேற்கொண்டு உயிர்த்தெழுந்ததற்கு முந்திய காலம். நாம் துன்பங்களை எதிர்கொள்ளும்போது  நாம் யோபுவைவிட ஒரு மேலான நிலையில் இருக்கிறோம். இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தது போல நாமும் எழுந்திருப்போம் என்பது நமக்குத் தெரியும். ஆகையால் சோதனைகளையும் வேதனைகளையும் நீ சந்திக்கும்போது கர்த்தரை இன்னும் அதிகமாகப் பற்றிக் கொள். வெட்டாந்தரையிலுள்ள மரத்தின் வேர், தண்ணீரைத் தேடி ஆழமாகப் போவதைப் போல, உன் வாழ்க்கையின் வரட்சிகளும் உன்னை ஆண்டவரோடு ஆழமான அனுபவத்துக்கு வழிநடத்தட்டும்.

ஜெபம்

ஆண்டவரே, மரணத்துக்குப் பின்னும் எனக்கு வாழ்க்கை உண்டு என்பதை நினைவுபடுத்தியதற்காக நன்றி சுவாமி. ஆமென்.