காலைத் தியானம் – நவம்பர் 20, 2020

யோபு 16: 1 – 10                                                 

நான் இருக்கும் நிலையில் நீங்கள் இருந்தால்

பதினைந்தாம் அதிகாரத்தில் எலிப்பாஸ் மறுபடியும் யோபுவைக் கடிந்துகொள்வதைப் பார்த்தோம். ஆறுதல் படுத்தவேண்டிய நண்பர்களிடமிருந்து ஆறுதல் கிடைக்கவில்லை. நீ தேற்றரவாளனாகவும், ஆறுதல் கொடுக்கிறவனாகவும் இருக்கவேண்டுமானால் உன் வார்த்தைகளில் மிகவும் கவனமாயிருக்கவேண்டும். ஆறுதல் பெறவிரும்புகிறவர்களைப் புண்படுத்தக்கூடாது. அவர்கள் தவறு செய்திருந்தாலும்கூட அந்த தவறுகளைக் குறித்தே பேசிக்கொண்டிருக்கக் கூடாது. உன்னைத் துன்பப்படுகிறவர்களின் நிலைமையில் வைத்துப் பார்க்கவேண்டும். பிறர் உங்களுக்கு எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் பிறருக்குச் செய்யுங்கள் என்று வேதாகமத்தில் பார்க்கிறோம் அல்லவா? உன் வார்த்தைகள் மற்றவர்களை ஊக்கப்படுத்துகிறவைகளாகவும் உற்சாகப்படுத்துகிறவைகளாகவும் இருந்தால் மாத்திரமே நீ ஆறுதல் கொடுப்பாய்.           

ஜெபம்

ஆண்டவரே, என்னை ஆறுதல் கொடுக்கிறவனா(ளா)க உபயோகித்தருளும். ஆமென்.