யோபு 17: 1 – 16
உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன்
ஞானம் கர்த்தரிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ளும் ஒரு ஆசீர்வாதம். அந்த நாட்களில் உலகத்தின் பார்வையில் யோபுவின் மூன்று நண்பர்களும் ஞானிகளாகக் கருதப்பட்டார்கள். யோபு அவர்களை ஞானமுள்ளவர்களாகக் காணவில்லை. யோபுவின் நண்பர்கள் ஞானத்திற்கு தங்களுடைய சொந்த இலக்கணம் வைத்திருந்தது போலத் தெரிகிறது. உலகப் பிரகாரமான வெற்றிகளும் செல்வமும் கிடைப்பது ஒருவன் கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்கிறதின் பலன் என்று நினைத்துவிடக்கூடாது. அதே போல ஏழ்மையும் துன்பமும் கர்த்தருக்குப் பிரியமில்லாத வாழ்க்கை வாழ்கிறதின் பலன் என்றும் நினைத்துவிடக்கூடாது. உலகப்பிரகாரமான வெற்றிகளோடும் செல்வத்தோடும் வாழ்கிறவன் ஒவ்வொருவனும் ஞானியும் ஆகிவிடமுடியாது. ஞானம் கர்த்தரிடமிருந்து மாத்திரம் கிடைக்கும் ஆசீர்வாதம்.
ஜெபம்
ஆண்டவரே, செல்வத்தையல்ல, ஞானத்தையே எனக்குத் தாரும். ஆமென்.