யோபு 18: 1 – 21
அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்
பயங்கர ராஜா என்பது மரணத்தைக் குறிக்கும். பில்தாத் மறுபடியும் யோபுவைக் கடிந்துகொள்கிறான். யோபு துன்மார்க்கன். பாவங்களைச் செய்துவிட்டவன். பாவத்தின் சம்பளம் மரணம். ஆகையால் யோபு மரணத்திலிருந்து தப்பமுடியாது. யோபுவைச் சுற்றி நடக்கும் பயங்கரங்கள் அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் (மரணத்தில்) சீக்கிரமாகக் கொண்டுபோய் விட்டுவிடும். பில்தாத் சங்கீதக்காரனைப் போல, தேவன் ஆத்துமாவை மரணத்தின் வல்லமையிலிருந்து மீட்கிறவர் (சங்கீதம் 49:15) என்பதை உணரவில்லை. அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார் (ஏசாயா 25:8) என்ற தீர்க்கதரிசியின் வார்த்தைகளை அறிந்திருக்கவில்லை. நாம் பாவிகளாயிருந்தும் துன்மார்க்கராயிருந்தும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக நித்திய அழிவிலிருந்து மீட்கப்பட்டதற்காகத் திரியேக தேவனுக்கு நன்றி செலுத்துவோம்.
ஜெபம்
ஆண்டவரே, பில்தாத் சொல்லுவதைப் போல, என் ஆத்துமா அழிந்திருக்கவேண்டும். நீர் அழிவிலிருந்து என்னை மீட்டுக்கொண்டதற்காக நன்றி சுவாமி. ஆமென்.