காலைத் தியானம் – நவம்பர் 26, 2020

யோபு 21: 1 – 34                                                 

என் வசனத்தைக் கவனமாய்க் கேளுங்கள்  

யோபுவின் தர்க்கம் தொடருகிறது. யோபு தான் பேசப் போவதைப் பொறுமையுடன் கவனமாய்க் கேட்கும்படி சொல்லுகிறான். அதுவே தனக்கு அவர்கள் கொடுக்கும் பெரிய ஆறுதல் என்றும் சொல்லுகிறான். அக்கிரமக்காரர் அநேகர் செழித்து நீண்ட ஆயுளுடன் வாழ்வதைச் சுட்டிக்காட்டுகிறான். அவர்கள் அனைவரும் இவ்வாழ்க்கையில் அழிவைச் சந்திக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. மேலும் நீதிமான்களும் அக்கிரமக்காரரும் ஒரே விதமாய் மரிக்கிறார்கள். இவையெல்லாம் உண்மைதான் என்றாலும் நீதிமான்களுக்கும் துன்மார்க்கருக்கும் பெரிய வித்தியாசங்கள் உண்டு. இவ்வாழ்க்கையில் கர்த்தரோடு வைத்துக்கொள்ளும் உறவின் மகிழ்ச்சியை துன்மார்க்கர் அறிவதில்லை. துன்மார்க்கர் பரலோகத்தைச் சுதந்தரித்துக் கொள்வதில்லை. நீதிமான்களின் சந்ததிகள் பெறும் கர்த்தருடைய ஆசீர்வாதத்தைத் துன்மார்க்கரின் சந்ததிகள் அனுபவிப்பதில்லை.

ஜெபம்

ஆண்டவரே, யோபு சொல்வதைப் போல துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. ஆமென்.