காலைத் தியானம் – நவம்பர் 28, 2020

யோபு 23: 1 – 17                                                

அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்    

யோபு தன்னுடைய அங்கலாய்ப்பும் கேள்விகளும் மனிதனிடம் அல்ல என்றும் அவன் கர்த்தரைக் காண வேண்டும் என்றும் சொல்லுகிறான்.  நான் கர்த்தரைக் காணவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்; நான் எங்கு சென்றாலும் அவரைக் காணமுடியவில்லை. அவரிடம் என் நியாயத்தை எடுத்துச் சொல்வேன். அவர் என்ன சொல்லுகிறார் என்பதை நான் கேட்டு தெரிந்துகொள்வேன். யோபுவின் வார்த்தைகளில் அவனுடைய அங்கலாய்ப்பும் அவனுடைய பெலவீனமும் அவனுடைய ஒன்றும் செய்யமுடியாத நிலையும் தெரிகிறது. அடுத்த முறை துன்பத்திலும் வேதனையிலும் வாடுகிற ஒருவரைச் சந்திக்கும்போது அவர் பொறுமையாகவும் சாந்தமாகவும் இருப்பது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்து செயல்படு. யோபு தான் அனுபவித்த வேதனைகளின் மத்தியிலும், கர்த்தர் தன்னைச் சோதித்துமுடித்தபின் தான் பொன் போல ஜொலிக்கப்போவதாக சொல்லுகிறான்.

ஜெபம்

ஆண்டவரே, துன்பங்களை நான் கடந்து செல்லும்போது நீர் என்னைப் பக்குவப்படுத்தி உமக்காக ஜொலிக்கிற பொன்னாக மாற்றுகிறீர் என்பதை உணரச் செய்யும். ஆமென்.