காலைத் தியானம் – நவம்பர் 29, 2020

யோபு 24: 1 – 25                                              

தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால்    

ஒவ்வொரு அதிகாரத்திலும் மறுபடியும் மறுபடியும் யோபுவின் நண்பர்கள், யோபுவின் பாவங்கள்தான் அவனுடைய துன்பங்களுக்கும் வேதனைக்கும் காரணம் என்றும், ஆகையால் அவன் தேவனிடம் மன்னிப்பைப் பெறவேண்டும் என்றும் கூறி வந்தார்கள். யோபுவோ தான் குற்றமற்றவன் என்றும், தேவன் ஏன் தனக்கு அந்த கொடுமையான துன்பங்களைக் கொடுக்கவேண்டும் என்றும் தொடர்ந்து விவாதிப்பதை நாம் பார்த்தோம். 24ம் அதிகாரத்தில் யோபு சற்று வித்தியாசமான விவாதம் ஒன்றை கொண்டு வருகிறான். பலவிதமான துன்மார்க்க வழிகளில் நடக்கிறவர்களுக்குக் கூட தேவன் இவ்வுலகில் சுக வாழ்வைக் கட்டளையிடுகிறார். என்னுடைய துன்பங்களுக்கு என் மறைமுகமான பாவங்கள் தான் காரணம் என்றால், வெளிப்படையாகத் துன்மார்க்கத்தில் ஈடுபடுகிறவர்களின் சுகவாழ்வுக்கு என்ன விளக்கம் தரமுடியும் என்பது யோபுவின் வாதம். தேவனுடைய வழிகள் நம்முடைய அறிவுக்கு எட்டாதவை.

ஜெபம்

ஆண்டவரே, என் துன்பங்களின் மத்தியிலும் நீர் என்னிடத்தில் அன்பாயிருக்கிறீர் என்பதை அறிவேன். அதுவே எனக்குப் போதும். ஆமென்.