காலைத் தியானம் – டிசம்பர் 02, 2020

யோபு 26: 7 – 14

அவரைக் குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்   

இந்த அதிகாரத்தின் முதல் பகுதியில் தன் நண்பர்கள் தன்னுடைய பெலனற்ற, திக்கற்ற நிலையில் எந்தவிதத்திலும் உதவியாக இருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய யோபு, இப்போது கர்த்தருடைய மகத்துவத்தைக் குறித்து பேசுகிறான்.  பூமி உருண்டை என்பதையும் அது “அந்தரத்திலே தொங்குகிறது” என்பதையும் மனிதன் விஞ்ஞான ரீதியாக கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பதாகவே கர்த்தர் யோபுவுக்கு அதை வெளிப்படுத்திவிட்டார் (வசனம் 7). உலகம் அனைத்தும், எல்லாவற்றையும் அறிந்த கர்த்தரால் உருவாக்கப் பட்டது மாத்திரமல்லாமல், அவை அவருடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை என்பதையும் யோபு எடுத்துக் கூறுகிறான். இந்த உண்மைகள் யோபுவின் நண்பர்களுக்குத் தெரியாதவை அல்ல.  கர்த்தரைப் பற்றிய பல உண்மைகளை அறிந்த யோபுவின் நண்பர்கள் கர்த்தரைக் குறித்துத் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தார்கள்.  யோபுவோ தனக்குத் தெரிந்தது மிகவும் கொஞ்சம் என்று சொல்லுகிறான்.  கர்த்தரைப் பற்றி உனக்கு எல்லாம் தெரியும் என்று நீ நினைக்கிறாயோ?  The more we learn about God, the more we discover how much more there is to know.

ஜெபம்

ஆண்டவரே, என் வாழ்நாளெல்லாம் உம்முடைய மகத்துவத்தை அறிந்துகொள்ளும் அனுபவத்தில் வளர்ந்துகொண்டே போகும் பாக்கியத்தை என்க்குத் தாரும். ஆமென்.