காலைத் தியானம் – டிசம்பர் 04, 2020

யோபு 28: 1 – 28

ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே?   

அறிவையும் ஞானத்தையும் உலகில் பலரும் பலவிதமாக விவரித்திருக்கிறார்கள்.  பலர் அனுபவம் ஞானத்தைக் கொடுக்கும் என்று நினைக்கிறார்கள். பரிசுத்த வேதாகமம் சொல்லும் ஞானம் தானாக ஒருவனிடம் உருவாகுவதில்லை.  அறிவைச் சரியான முறையில் உபயோகிப்பதே ஞானம் என்று சார்ல்ஸ் ஸ்பர்ஜன் என்ற பக்தன் சொல்லுகிறார். (Wisdom is the right use of knowledge – Charles Spurgeon.)  யோபுவின் நண்பர்கள், தங்களின் அறிவுரை தங்களுடைய ஞானத்தை வெளிப்படுத்தியதாக நினைத்துக்கொண்டார்கள். யோபு அப்படி நினைக்கவில்லை. விலை மதிப்பற்ற ஞானத்தை இரும்பு, செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களைப் போல, அல்லது பவளம், பளிங்கு, இந்திர நீலக்கல் போன்ற அதிக விலையுயர்ந்த கற்களைப் போல பூமிக்குள்ளிருந்து தோண்டி எடுக்க முடியாது. அதிக பணம் கொடுத்து விலைக்கு வாங்கவும் முடியாது. ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம் என்று யோபு இந்த அதிகாரத்தை நிறைவு செய்கிறார். கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் மற்றெல்லா பயங்களையும் மேற்கொள்ளும் பயம்.

ஜெபம்

ஆண்டவரே, நீர் தரும் ஞானம் எனக்கு வேண்டும். பொல்லாப்பைவிட்டு விலகி உம்மிடம் அன்பும் பயபக்தியும் கொண்டு வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.