காலைத் தியானம் – டிசம்பர் 05, 2020

யோபு 29: 1 – 25

அந்தச் செல்வ நாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்   

யோபு தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறான். எப்பொழுதும் உணர முடிந்த தேவபிரசன்னம், பிறரிடமிருந்து கிடைத்த மரியாதை, பிறருக்கு செய்த உதவிகள், தான் அனுபவித்த செழிப்பு போன்ற அனைத்தையும் நினைவுகூர்ந்து கடந்த கால எண்ணங்களில் மிதக்கிறதைப் பார்க்கிறோம். நாம் துன்பங்களைச் சந்திக்கும்போது கர்த்தர் கடந்த நாட்களில் நம் வாழ்க்கையில் செய்த அற்புதங்களையும் நன்மைகளையும் நினைவுகூர்ந்து நம் விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். ஆனால் அதே சமயம் கடந்த காலத்திலேயே வாழ்ந்துகொண்டு, நிகழ் காலத்தையும் எதிர்காலத்தையும் எதிர்கொள்ள முடியாத நிலைக்கு நாம் போய்விடக் கூடாது. இது குறிப்பாக வயதில் பெரியவர்களுக்கு ஒரு முக்கியப் பாடம்.  இளவயதையே நினைத்துக் கொண்டு, முதுமையில் மகிழ்ந்திருக்க வேண்டிய அனுபவங்களைக் கோட்டைவிட்டுவிடாதீர்கள்.                                      

ஜெபம்

ஆண்டவரே, அந்தந்த வயதிற்குரிய இனிய அனுபவங்களை என் வாழ்நாள் முழுவதும் எனக்குத் தாரும். ஆமென்.