காலைத் தியானம் – டிசம்பர் 13, 2020

எபே 5: 1 – 10 

நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி   

பிதாவாகிய தேவனைத் ‘தகப்பனே’ அல்லது ‘அப்பா’ என்று அழைக்கும் உரிமையையும் கிருபையையும் நாம் பெற்றிருக்கிறோம். அந்த பிதாவாகிய தேவன், திரியேகரில் ஒருவரான தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, நம்மைப் பாவத்தின் சாபத்திலிருந்து மீட்பதற்கு மாத்திரமல்லாமல், நமக்கு முன்மாதிரியாக இருக்கும்படியும் பூமிக்கு அனுப்பி வைத்தார். அந்த முன்மாதிரியை நாம் பின்பற்றவேண்டும். பின்பற்றினால்தான் நாம் தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக இருக்கமுடியும். நாம் பின்பற்றவேண்டியவைகளில் முக்கியமான ஒன்று இரண்டாம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கிறிஸ்து நம்மில் அன்புகூர்ந்தது போல நாமும் அன்பிலே நடந்துகொள்ள வேண்டுமாம்! கிறிஸ்துவின் அன்பு சுயநலமற்றது. நிபந்தனையற்றது. உயிரைக் கொடுக்குமளவுக்கு உறுதியானது. கிறிஸ்துவின் அன்புதான் நமக்கு அளவுகோல். அந்த அன்பு உன்னிடம் இருந்தால் மற்றெல்லா நற்குணங்களும் தாமாகவே வந்துவிடும்.                     

ஜெபம்

பரம தகப்பனே, நான் உமக்குப் பிரியமான பிள்ளையாக, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்.