காலைத் தியானம் – டிசம்பர் 15, 2020

1 யோவான் 3: 1- 10    

அவரைத் தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாயிருப்போம்   

கிறிஸ்தவன் என்ற சொல்லுக்கு கிறிஸ்துவுக்குச் சொந்தமானவன் என்று பொருள். கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறவன்தான் கிறிஸ்தவன். கிறிஸ்துவில் நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறதில்லை என்று 6ம் வசனத்தில் பார்க்கிறோம்.  மேலும், பாவம் செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை என்று வாசிக்கிறோம். ஆகையால் தொடர்ந்து பாவத்தில் வாழ்கிற எவனும் தன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்ள முடியாது. பாவம் சாத்தானுடையது. பாவம் செய்கிறவன் சாத்தானுக்குச் சொந்தமானவன் (வசனம் 8). சாத்தானுடைய கிரியைகளை அழிக்கவே இயேசு கிறிஸ்து, இவ்வுலகிற்கு மனித உருவெடுத்து வந்தார். இயேசு கிறிஸ்துவின் வருகையை அர்த்தமில்லாமல் கொண்டாடும் பண்டிகையாய் கிறிஸ்துமஸ் மாறிவிட்டது. இயேசு கிறிஸ்துவின் வருகை உன்னைப் பரிசுத்தவானாக மாற்றியிருந்தால் மாத்திரமே – அந்த காரணத்துக்காக மாத்திரமே – நீ பண்டிகையைக் கொண்டாடவேண்டும்.                   

ஜெபம்

ஆண்டவரே, உம்மை அறிந்தவனாக, உம்மைத் தொடர்ந்து காண்கிறவனாக, கிறிஸ்தவனாக வாழும் கிருபையை எனக்குத் தாரும். ஆமென்.