காலைத் தியானம் – டிசம்பர் 20, 2020

ஏசாயா 9: 6 – 7   

நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்  

இயேசு கிறிஸ்து தான் நமக்காகக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய வெகுமதி. நம் பாவங்களை மன்னித்து நம்மை இரட்சிக்கும்படி பிதாவாகிய தேவனால் பூமிக்கு அனுப்பப்பட்ட வெகுமதி. கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் நாம், இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்பை இலவசமாகப் பெற்றுக் கொண்டோம் என்பதை உணருவோமாக. இலவசமாகப் பெற்றதை நாமும் இலவசமாகக் கொடுக்க வேண்டும். The gift must go on. புது துணிகள், பலகாரம், குடும்பம் ஒன்றாகச் சேர்வது போன்ற பல நன்மைகளை நம் ஆண்டவரிடமிருந்து பெறுகிறோம். இந்த கிறிஸ்துமஸ் நாட்களில், பெறுவதைப் பற்றி யோசிக்காமல் கொடுப்பதைப் பற்றி யோசிப்போமாக. துன்பத்தில் சிக்கியிருக்கும் ஒருவரின் முகத்தில் சிரிப்பு வருகிறபடி ஏதாவது செய்ய முயற்சிப்போமாக. உடனடியாக செயல்படுவோமாக. The gift must go on.        

ஜெபம்

ஆண்டவரே, இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் உண்மையான மகிழ்ச்சியை உலகில் பரப்ப என்னையும் உபயோகித்தருளும். ஆமென்.