காலைத் தியானம் – டிசம்பர் 21, 2020

லூக் 1: 1- 19  

எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்   

எந்த ஒரு நல்ல செய்தியையும் குடும்பத்திலுள்ள பெரியவர்களுக்கும் ஊரிலுள்ள பெரியவர்களுக்கும் முதலில் அறிவிக்கவேண்டும் என்பதுதான் உலக நியதி. அந்த முறைப்படி பார்த்தால், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முதலில் ராஜாவுக்கும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும்தான் சொல்லியிருக்கவேண்டும். குறைந்தபட்சம் வேத சாஸ்திரிகளுக்கு அல்லது ஞானிகளுக்காவது அறிவித்திருக்கலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு, சமுதாயத்தில் மிகவும் தாழ்வாக எண்ணப்பட்ட மேய்ப்பர்களிடம் அறிவித்ததே ஒரு புரட்சிதான். நமக்கு அது புரட்சி. நம்முடைய ஆண்டவருக்கு அது இயல்பு. தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துவதே ஆண்டவருடைய பண்பு. தாழ்மையான இருதயமுள்ளவர்களை இன்றும் அவர் தேடிக் கொண்டேயிருக்கிறார். உன்னைப் பார்த்து அவர் மகிழ்ச்சியடைவாரா?       

ஜெபம்

ஆண்டவரே, நான் முக்கியமானவன், பெரியவன் போன்ற எண்ணங்கள் எனக்குள் வந்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.