லூக் 1: 26 – 38
அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது
வல்லமையும் பராக்கிரமும் மிகுந்த ராஜ்யம் என்று எண்ணப்பட்ட எத்தனையோ ராஜ்யங்கள் தோன்றி மறைந்துவிட்டன. பராக்கிரமம் மிகுந்த என் ராஜ்யம் அழியாது என்று எண்ணி உருவாக்கப்பட்ட ராஜ்யங்கள் அழிந்துவிட்டன. உதாரணமாக எகிப்து ராஜ்யம், பாபிலோனிய ராஜ்யம், சீரியரின் ராஜ்யம், கிரேக்கரின் ராஜ்யம், ரோமர்களின் ராஜ்யம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் மறைந்து போகாமல் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் ராஜ்யம் ஒன்றுண்டு. அதுதான் கிறிஸ்துவின் ராஜ்யம். மத்தேயு 13ம் அதிகாரத்தில் கிறிஸ்துவின் ராஜ்யம் (Kingdom of God, Kingdom of Heaven) எப்படிப்பட்டது என்பதை பல உவமைகள் மூலமாக இயேசு கிறிஸ்து விளக்கியுள்ளார். நீ இந்த ராஜ்யத்தின் குடிமகனா(ளா)கி விட்டாயா? பவுல் அப்போஸ்தலன், நாம் அனைவரும் பரலோக ராஜ்யத்தின் குடிமக்கள்; இந்த பூமியில் நாம் தற்காலிகமாகக் குடியேற்றப்பட்டிருக்கிறோம் என்கிறார். We are a colony of heaven. பரலோக ராஜ்யத்தின் குடிமகனா(ளா)வதற்கு இடுக்கமான வாசல் வழியாகத்தான் போக முடியும்.
ஜெபம்
ஆண்டவரே, என்னையும் உம்முடைய பரலோக ராஜ்யத்தின் குடிமகனா(ளா)க ஏற்றுக் கொள்ளும். ஆமென்.