காலைத் தியானம் – டிசம்பர் 23, 2020

லூக் 1: 39- 56  

தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப் பார்த்தார்   

தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இப்பூமிக்கு மனு உருவில் அனுப்பி வைக்க மரியாளை ஏன் தெரிந்தெடுத்தார்? மரியாள் தான் மிகவும் அழகுள்ளவள், செல்வம் மிகுந்தவள், இயேசுவை வளர்த்தெடுப்பதற்குத் தகுந்தபடி அதிகம் படித்தவள் போன்ற காரணங்கள் அல்ல. மரியாளிடம் மூன்று குணாதிசயங்கள் இருந்தன – தாழ்மை, தூய்மை, கீழ்ப்படிதல். ஆண்டவர் நம்மிடமும் இந்த குணங்களைத் தான் எதிர்பார்க்கிறார். பணம், பதவி, பேச்சுத்திறன் ஆகியவை அவருக்குத் தேவையில்லை. தாழ்மை, தூய்மை (பரிசுத்தம்), கீழ்ப்படிதல் ஆகிய மூன்று குணங்களும் உன்னிடம் இருக்கின்றனவா?       

ஜெபம்

ஆண்டவரே, தாழ்மை, தூய்மை, கீழ்ப்படிதல் ஆகிய மூன்று குணங்களிலும் நீர் எதிர்ப்பார்க்கும் அளவுக்கு நான் உயரும்படி என்னை வழிநடத்தும். ஆமென்.