காலைத் தியானம் – டிசம்பர் 26, 2020

மத் 2: 1- 23  

அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்            

கிழக்கு திசையிலிருந்து சாஸ்திரிகள் இயேசுவைப் பணிந்துகொள்ள வந்தார்கள். எந்த இடத்திலிருந்து (அல்லது நாட்டிலிருந்து) வந்தார்கள் என்பது சொல்லப்படவில்லை. நட்சத்திரத்தைப் பின்பற்றி வந்ததால் அதிக தூரத்திலிருந்து பயணம் செய்து வந்தார்கள் என்பது தெரிகிறது.  ஏரோது ராஜா,  தானும் இயேசுவைப் பணிந்துகொள்ளவேண்டும் என்று சொல்லுகிறான். ஆனால் அவன் வார்த்தைகளில் உண்மையில்லை. அது ஏரோது மூலமாக சாத்தான் செய்த சூழ்ச்சி. மனிதரைப் பாவத்திற்கு நேராக இழுப்பது சாத்தானுடைய குறிக்கோள். மனிதரை பாவத்திலிருந்து மீட்கும் குறிக்கோளுடன் இயேசு பூமிக்கு வந்துவிட்டார் என்பது சாத்தானுக்குத் தெரியும். இயேசுவைக் கொன்றுவிட்டால் மனிதருக்கு இரட்சிப்பு இருக்காது என்பது சாத்தானுடைய எண்ணம். இந்த கிறிஸ்துமஸ் நாட்களில், இயேசு கிறிஸ்து பூமிக்கு மனிதனாக உருவெடுத்தது உன் இரட்சிப்புக்காக என்பதை நினைவுகூருகிறாயா? அவரை மாத்திரமே பணிந்துகொள்வேன் என்கிற வாஞ்சையும் வைராக்கியமும் உன்னிடம் உண்டா?                          

ஜெபம்

ஆண்டவரே, இந்த பண்டிகை நாட்களில் உம்மைத் துதித்து, ஆராதித்து, பணிந்துகொள்ளும் இருதயத்தை எனக்குத் தாரும். ஆமென்.