யோவான் 1: 1 – 14
எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி
மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் எழுதிய வேதாகமத்திலுள்ள நற்செய்தி நூல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, யோவான் இயேசு கிறிஸ்துவை சற்று வித்தியாசமாக அறிமுகம் செய்கிறார். நம் கண்களுக்கும் மூளைக்கும் எட்டியவை எட்டாதவை ஆகிய அனைத்தையும் உருவாக்கியவர் இயேசு கிறிஸ்துவே. மேலும் யோவான் அவரை வார்த்தை என்றும், மெய்யான ஒளி என்றும் விவரிக்கின்றார். இயேசு கிறிஸ்து என்றும் அணையாத நித்திய ஒளி. அவர் இருக்கும் இடத்தில் எந்தவித இருளுக்கும் இடமேயில்லை. இருள் சாத்தானுடைய கோட்டை. இன்று நீ எந்த விதமான இருளைச் சந்தித்தாலும் அல்லது கடந்து சென்றாலும் மெய்யான ஒளியாகிய இயேசுவே உனக்குத் தேவை. அவர் ஒருவரால் மாத்திரம்தான் இருளை அகற்ற முடியும். கிறிஸ்து இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் இந்த நாட்களில், இயேசுவே மெய்யான ஒளி என்பதை அனுபவித்து அறிந்திருக்கிறாயா?
ஜெபம்
ஆண்டவரே, என் வாழ்க்கையில் குறுக்கிடும் இருளை முற்றிலும் அகற்றிவிடும். என்னோடு தங்கியிருந்து இருள் என்னை நெருங்காதபடி காத்துக் கொள்ளும். ஆமென்.