காலைத் தியானம் – டிசம்பர் 29, 2020

சங் 30: 1 – 12      

என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்            

நம்மில் அநேகருக்கு இந்த 2020ம் வருடம் ஆனந்தமான வருடமாக இருக்கவில்லை. கோவிட்-19 என்ற இந்த கொடிய கிருமியினால் உலகமே பாதிக்கப்பட்டு விட்டது. வேலை இழந்தவர்கள் பலர். வருமானத்தில் ஒரு பகுதியை மாத்திரமே பெற்றுக் கொண்டவர்கள் அநேகர். பொருளாதார நிலை முன்னேருவதற்குப் பல ஆண்டுகள் ஆகும் என்று வல்லுனர்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் கோவிட்-19 வியாதியால் மரித்தவர்களும் உண்டு. பலவிதமான வியாதிகளைக் கடந்து வந்த அனுபவமும் பலருக்கு உண்டு. இப்படிப்பட்ட துன்பங்களின் மத்தியிலும் கர்த்தர் நம்மைக் காத்து பராமரித்து வந்திருக்கிறார். அவருக்கு நாம் எப்போதும் நன்றி செலுத்த வேண்டும். நம்முடைய துன்பங்கள் இன்பமாக மாறிய அனுபவமும் நம்மில் அநேகருக்கு உண்டு. ஒருவேளை இன்னும் நீ துன்பத்தின் நடுவில் இருந்தால், ஆனந்தக் களிப்பைக் கொடுக்கக்கூடிய கர்த்தரை நீ பிடித்துக் கொள். அவர் உன்னைக் கைவிடமாட்டார்.                    

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய அளவில்லாத அன்புக்காகவும் இரக்கத்துக்காகவும் நன்றி சுவாமி. ஆமென்.