சங் 65: 1 – 13
வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்
வருடத்தின் கடைசி நாளான இன்று கணக்கெடுக்கும் நாள். இந்த வருடத்தில் ஆண்டவர் செய்த எல்லா நன்மைகளையும் நினைவுகூரும் நாள். அவற்றை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்து தேவனுக்கு நன்றி சொல்லும் நாள். இந்த வருடத்தில் உன்னுடைய ஆத்தும வளர்ச்சி எப்படி இருந்தது என்பதை ஆராய்ந்துபார்க்க வேண்டிய நாள். நீ கர்த்தருக்காக செய்யவேண்டியவைகளில் ஏதாவது பாக்கி வைத்திருந்தால், அதைச் செய்து முடிக்கவேண்டிய நாள். நாளைக்கென்று எதையும் தள்ளிப் போட வேண்டாம். இந்த வருடத்தில் யாரையாவது புண்படுத்தியிருந்தால் இன்றே அவர்களிடம் மன்னிப்புக் கேள். நன்மைகளால் இந்த வருடத்தை முடிசூட்டிய கர்த்தரைத் துதித்துக் கொண்டேயிரு.
ஜெபம்
என் ஆத்துமாவே கர்த்த்ரை ஸ்தோத்திரி. என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி. அவர் செய்த சகல நன்மைகளையும் மறவாதே. ஆமென்.