காலைத் தியானம் – ஜனவரி 02, 2021

லூக் 3: 1- 14        

மனந்திரும்புதலுக்கு  . . .  நாங்கள் என்ன செய்ய வேண்டும்?           

யோவானிடம் அவனைச் சுற்றியிருந்த மக்களும் ஆயக்காரரும் போர்ச்சேவகரும், மனந்திரும்புதலுக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். யோவானுடய பதில் பணத்தையும் பொக்கிஷத்தையும்  மையமாகக் கொண்டிருந்தது. இரண்டு அங்கிகள் வைத்திருந்தால், ஒன்றை இல்லாதவனுக்குக் கொடு (வசனம் 11). நீ அரசாங்கத்திற்காக வாங்க வேண்டியதற்கு அதிகமாக ஒன்றும் (லஞ்சம்) வாங்காதே (வசனம் 13). உன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மற்றவர்களை ஒடுக்கிப் பணம் சம்பாதிக்காதே (வசனம் 14). நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு, நாம் பணத்தையும் பொருட்களையும் எப்படி கையாளுகிறோம் என்பது முக்கியமானது மாத்திரமல்ல, மையமானதும்கூட. லூக்கா 19:8-9 வசனங்களை எடுத்து வாசியுங்கள். இந்த புது வருடத்தில் உன் ஆவிக்குரிய வாழ்க்கை உறுதிப்படவேண்டுமானால், நீ எப்படி பணத்தைக் கையாளுகிறாய் என்பது மிகவும் முக்கியமானது.              

ஜெபம்

ஆண்டவரே, இந்த வருடத்தில் பணம் சேர்ப்பதில் நான் குறியாக இல்லாமல், நீர் கொடுக்கும் பணத்தைப் பணம் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ உதவி செய்யும்.  ஆமென்.