மத் 13: 44 – 46
தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று
44வது வசனத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் உவமையை அநேகம் முறை வாசித்திருந்தாலும், அதின் அர்த்தத்தை நாம் சரியாகக் கவனிப்பதில்லை. புதைந்து இருக்கிற பொக்கிஷம், நம் கண்களுக்குத் தெரியாமலிருக்கிற பரலோகத்தின் பொக்கிஷங்களைக் குறிக்கின்றது. ஒரு புதையல் இருக்கும் நிலத்தைக் கண்டுகொள்ளுகிறவன், எப்படி தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்றாகிலும் அந்தப் புதையல் இருக்கும் நிலத்தை வாங்குவானோ, அதே போல பரலோகப் புதையலைக் கண்டுகொண்டவனும் தன்னுடைய உடைமைகளையெல்லாம் இல்லாதவர்களுக்குக் கொடுத்துப் பரலோகப் புதையலைச் சம்பாதித்துக் கொள்ளுகிறான். பரலோகப் பொக்கிஷத்தைப் பெறவேண்டுமானால், இவ்வாழ்க்கையின் பொக்கிஷத்தை இழக்கவேண்டும். கடினமானப் போதனையாகத் தோன்றலாம். ஆனால் அதுதான் வேதாகமம் கூறும் போதனை.
ஜெபம்
ஆண்டவரே, பரலோகத்தின் பொக்கிஷங்களை எப்பொழுதும் என் கண்களுக்கு முன் நிறுத்தியருளும். ஆமென்.